இந்திய கடற்படையில் 250+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

 

இந்திய கடற்படையில் 250+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

பாதுகாப்பு அமைச்சகம், இந்திய கடற்படை, டிரேட் அப்ரண்டிஸ் (2022- 23 பேட்ச்) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி, தொழிற்பயிற்சி பள்ளியில் ஓராண்டு காலத்திற்கு பயிற்சி பெறுவதற்கு ITI தகுதி பெற்ற இந்திய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 250+ பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதி, சம்பளம், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து 05.12.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய கடற்படை சார்பில் வெளியான அறிவிப்பில் 250கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் 01.04.2001 அன்று முதல் 01.04.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.


  • SC மற்றும் ST விண்ணப்பதாரர்கள் 01.04.1996 அன்று முதல் 01.04.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.
  • கடற்படை சிவிலியன் / பாதுகாப்பு பணியாளரின் மகன் அல்லது மகள் ஆகியோருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் SSC / Matric / Std X முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் ITI (NCVT/SCVT) முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி, எழுத்து தேர்வு,நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு 27.01.2022 அன்று நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் 29.01.2022 அன்று வெளியிடப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கான நேர்காணல் 31.01.2022 முதல் 03.02.2022 வரை நடைபெறும். நேர்காணலுக்குப் பிறகு விண்ணப்பதாரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள். அந்த தேர்வுகள் பிப்ரவரி 7 முதல் 15 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 5.12.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அந்த படிவத்தை 14 டிசம்பர் 2021க்குள் ஆஃப்-லைன் முறையிலும் விண்ணப்பிக்க வேண்டும். 14 டிசம்பர் 2021 க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நிறைவு பெறுவதனால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post