At the Tamil Nadu Consumer Goods Corporation

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை 2021 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருவண்ணாமலை மாவட்ட மண்டலத்தில் Record Clerk, Security/ Watchman ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

👉  நிறுவனம்                                     -    TNCSC
👉பணியின் பெயர்             -  Record Clerk, Security/ Watchman
👉கடைசி தேதி                   -  24.11.2021
👉விண்ணப்பிக்கும் முறை  -  விண்ணப்பங்கள்

தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

TNCSC திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் Record Clerk, Security/ Watchman ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • விண்ணப்பிப்போர் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
  • TNCSC கல்வித்தகுதி :
    • பருவகால பட்டியல் எழுத்தர் (Record Clerk) – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • பருவகால காவலர் (Security/ Watchman) – அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
    TNCSC ஊதிய விவரம் :

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
    • பருவகால காவலர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
  • தேர்வு செயல்முறை :

    இந்த அரசு பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்கணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

    விண்ணப்பிக்கும் முறை :

    தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 24.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

                                                   
At the Tamil Nadu Consumer Goods Corporation


Post a Comment

Previous Post Next Post